சவூதி அரேபியாவில் தமிழ் கலாச்சார அரங்கு!

சவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்புப் படை, ஒவ்வொரு ஆண்டும் ஜனதரியா என்கின்ற கலாச்சாரத் திருவிழாவை, அதன் தலைநகர் ரியாத்தில் நடத்திக் கொண்டு வருகிறது. இவ்விழாவில் சவூதி அரேபியாவின் பலம், இராணுவத் தளவாடங்கள் மற்றும் அதன் கலாச்சாரம் நாகரீகம், வரலாறு போன்ற விஷயங்கள் அடங்கிய அரங்குகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதனை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்து மகிழ்வுறுவர்.

அந்தக் கலாச்சாரத் திருவிழாவில், ஒவ்வொரு தே(நே)ச நாடுகளையும் கவுரவித்து, அவர்கள் சார்ந்த கலாச்சாரம், வரலாறு, தொழில்வளம், கல்வி வளர்ச்சி போன்ற விஷயங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அரங்குகளை அமைத்துத் தருவர்!

அந்த வரிசையில், 2018 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவில் இந்தியாவை கவுரவிக்கும் முகமாக, இந்த ஆண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு, கடந்த ஃபிப்ரவரி 7ஆம் தேதி அன்று, சவூதி மன்னர் இரண்டு புனித பள்ளிகளின் காவலர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்களும் ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்கள்!

மாநில அரங்குகள்

இந்தியத் தூதரகத்தின் வழிகாட்டுதலில், அனைத்து மாநில அரங்குகளும் அமைக்கப்பட்டு, பல்வேறு மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, எதிர் வரும் ஃபிப்ரவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில், வியாழன் மற்றும் வெள்ளியன்று தமிழ்நாட்டிற்கான அரங்கு அமைக்கப்பட உள்ளது.

ரியாத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகள் ரியாத் தமிழ்ச் சங்கத்துடன் ஒன்றிணைந்து, அதி நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன், பிரமாண்டமாக தமிழ் கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றும் வண்ணம் அரங்கு அமைக்கப்பட உள்ளது. 

மேலும், தமிழக சுற்றுலாத் துறையுடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள சுற்றுலா வாய்ப்புகள் குறித்த கையேடுகளும், துண்டு பிரசுரங்களும், தமிழர்களுக்கும் - அரேபியர்களுக்கும் வரலாற்று மற்றும் மொழி ரீதியான தொடர்புகள் குறித்தும், ஆத்திச் சூடி, திருக்குறள் போன்றவற்றை அரபு மொழியில் மொழி பெயர்த்த விழா மலரும், தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகையும் அரங்கிற்கு வருபவர்க்கு அளிக்கப்பட உள்ளது, சிறுவர்கள் நம் கலாச்சார உடையிலும் தமிழ்ப் பெருந்தலைவர்கள் போல் வேடமிட்டும், அரங்கிற்கு வருபவர்களை வரவேற்க உள்ளார்கள். ஜல்லிக்கட்டுக் காளை மற்றும் மாமல்லபுரம் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் வரலாற்றை, நம்முடன் பணியாற்றும் அயல்தேசத்து மக்களுக்கு எடுத்துச் செ(சொ)ல்ல, ஓர் அரிய வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, ரியாத் வாழ் தமிழர்கள் மற்றும் அரங்க ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கிறார்கள்! 

பண்டைய தமிழ் மொழியின் சிறப்பு பாலை வெளியிலும் பரப்பப்பட உள்ளது என்பது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சியே!

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018