அலற...அலற... ஈவு இரக்கம் இல்லாம புரட்டி எடுத்த ஆஸி.,: டி-20யில் புது உலகசாதனை!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முத்தரப்பு டி-20 தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகசாதனை படைத்தது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

இதன் 5வது லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்டில் அதிவேக சதம் விளாசி அசத்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 243 ரன்கள் குவித்தது.இமாலய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (59) அசத்தல் துவக்கம் அளித்தார். சார்ட் (76) அரைசதம் அடித்து அவுட்டானார். தொடர்ந்து வந்த லின் (18), மேக்ஸ்வெல் (31) ஓரளவு கைகொடுத்தனர்.பின்ச் நம்பிக்கை:

கடைசி நேரத்தில் பின்ச் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

புது உலகசாதனை:

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்களை வெற்றிகரமாக விரட்டிய அணிகள் வரிசையில் ஆஸ்திரேலிய அணி () முதலிடம் பிடித்தது.

* இப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் (236/6), இங்கிலாந்து (230/8), இந்தியா (211/4) அணிகள் அடுத்த மூன்று இடங்களில் உள்ளது.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018