வக்கார் யூனிசை முந்திய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜத்ரான்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜத்ரான், பாகிஸ்தானின் வக்கார் யூனிசை முந்தினார்.

சார்ஜாவில் நேற்று நடந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

குறிப்பாக இளம் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் ஜத்ரான், 50 ரன்கள் மட்டுமே  விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் ஜிம்பாப்வே அணி 38 ஓவர்களில் 134 ரன்களுக்குள் சுருண்டது.  

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 21.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. முகமத ஷாஜத் 75 ரன்களும், இஷானுல்லா 51  ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின்மூலம் ஆப்கானிஸ்தான் அணி  5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றி உள்ளது. 

இந்த போட்டியில் முஜீப் ஜத்ரான் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தானின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்த முன்னாள் கேப்டன் வக்கார் யூனிசின் சாதனையை முறியடித்துள்ளார். 

Ninaivil

திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
மன்னார் பெரியமடு
லண்டன்
17 DEC 2018
Pub.Date: December 19, 2018
திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018