விடியும் என்று காத்திராதே விடியலை நோக்கி புறப்படு

இரவு நேரம், இறுதி யுத்தம் : வெளியானது தலைவர் பிரபாகரனின் கடைசி சந்திப்பு..!!

விடுதலைப்புலிகளின் தலைவர் தனது முடிவில் மிக உறுதியாக இருந்தார் என்பதை ஏற்கனவே பல சம்பவங்களின் மூலம் அறிய கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகளிற்கும் இலங்கைக்கு மிடையில் சில சர்வதேச பிரமுகர்களிற்கு ஊடாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் படி அரசியல் மற்றும் மருத்துவப்போராளிகள் சரணடைவார்கள் என்றுதான் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார். இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் புதிய தகவலொன்றும் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் நிதித்துறை பொறுப்பாளரான பாலதாசிற்கு இறுதி நேரத்தில் பிரபாகரன் சொன்ன அந்த அதிர்ச்சியான தகவல் என்ன என்பதே இப்பொழுது எழுந்துள்ள பரபரப்பான கேள்வியாகும்.

2009 மே மாதம் 16ம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது உண்மையான அர்த்தத்தில் யுத்தம் முடிவதற்கு முதல்நாள். அதுவரை வெள்ளமுள்ளிவாய்க்காலின் கிழக்கு புறமாக பொக்கணை யிலிருந்து முல்லைத்தீவு செய்லும் வீதியின் இடதுபுறமாக உள்ள வீடொன்றிலேயே தலைவர் பிரபாகரன் தங்கியிருந்திருக்கிறார். அந்த சமயத்தில் வலைஞர்மடக்கடற்கரை பகுதியினூடாக முன்னேறி வந்த இராணுவம் வெள்ளமுள்ளிவாய்க்கால் கடற்கரையையும் நெருக்கியிருந்தது. இதனால் கடற்கரையை அண்டிய அந்த பகுதியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் தலைவர் பிரபாகரனிற்கு ஏற்பட்டிருந்தது.

ltte33இதுதவிர, மறுநாள் 17ம் திகதி விடுதலைப்புலிகள் பெருமெடுப்பிலான ஊடறுப்புசமர் ஒன்றை நந்திக்கடல் அரண்களின் மேல் நடத்தி வற்றாப்பளை பகுதிக்கு நகரும் திட்டமிட்டிருந்தனர். இதற்காகவும் வெள்ளாமுள்ளிவாய்க்காலின் மேற்குப்பக்கமாக தலைவர் பிரபாகரன் நகர வேண்டியிருந்தது. மிக இறுக்கமாக அந்த களத்தில் மனிதர்கள் நிமிர்ந்து நடக்கவே முடியாத நேரம். அவ்வளவு அகோர செல் மற்றும் துப்பாக்கிச்சூடு. இவை சற்று தணிந்த சமயத்தில் மாலை மங்கும் சமயத்தில் தலைவர் பிரபாகரன் பிரதான வீதியை கடந்து மேற்குப்பக்கமாக நகர்ந்துள்ளார்.

வெள்ளமுள்ளிவாய்க்காலின் உண்டியல்பிள்ளையார் ஆலயம் உள்ள பகுதியால் பிரபாகரன் வீதியை குறுக்கறுக்க திட்டமிடப் பட்டிருந்தது. அதற்கு அருகில் உள்ள பதுங்குகுழி ஒன்றில்த்தான் நிதித்துறை பொறுப்பாளர் பாலதாஸ் இருந்தார். அவர் காலில் காயமடைந்திருந்தார். நடமாட முடியத நிலை. அந்த பகுதியை குறுக்கறுக்கும் போது காயமடைந்திருந்த பாலதாசை ஒருமுறை சந்திக்க விரும்பிய தலைவர் பிரபாகரன், அந்த பகுதிக்கு வந்து, பதுங்குகுழிக்குள் இறங்கியுள்ளார். தனது மெய்ப்பாதுகாவலர்களையும் உள்ளே அவர் வரவிடவில்லை. மிக இறுக்கமான அந்த சமயத்தில் சில நிமிடங்கள் மட்டுமே அந்த சந்திப்பு நடந்தது.

சில நிமிடங்களின் பின்னர் முகத்தில் எந்த மாற்றம் இல்லாமல் தலைவர் பிரபாகரன் பதுங்குகுழியை விட்டு வெளியில் வந்துள்ளார். அவர் சிறிதுதூரம் நடப்பதற்குள், பாலதாஸ் பெருங்குரலில் சத்தமிட்டு அழ ஆரம்பித்துள்ளார். தலைவர் பிரபாகரன் சொல்லிவிட்டு சென்ற தகவல் ஒன்றே அவரை நிலைகுலைய வைத்திருக்கும் என நம்பப்படுகிறது. விடுதலைப்புலி போராளிகள் தமது மரணத்திற்காக அழுபவர்கள் இல்லையென்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதனால் தனது முடிவு நினைத்து பாலதாஸ் அழுதிருப்பார் என நம்ப இடமில்லை. அனேகமாக தனது உறுதியான நிலைப்பாட்டையே தலைவர் பிரபாகரன் கூறியிருக்கலாமென்றே ஊகிக்க முடிகிறது.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018