அன்னையே தாயே அழியா புகழ் கொண்ட அற்புதமே!

நினைவு கவிதை.

தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்களின் அன்னையர்.

பார்வதி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள்.


வீரத்தின் விளைநிலமே விண்ணோக்கி போனதுமேன்.


அன்னையே தாயே

அழியா புகழ் கொண்ட அற்புதமே!

ஈழத்தின் புள்ளியை பூமிப்பந்தில்

ஈட்டி கொண்டு

எழுத வைத்த ஈகைத்தாயே.


வீரத்தின் விளை நிலமே

விண்ணையும் விஞ்சிய

வீரனை விடுதலைக்கு

ஈன்றெடுத்த வேங்கைத்தாயே,


பாவத்தை அழிக்க வந்த பரவசத்தை

பார் போற்ற பிறப்பெடுத்து

பாலூட்டி வளர்த்த பார்வதியே!


பொக்கிஷமே புண்ணியமே

காலத்தால் அழியாத காவலனாம்

சூரியனை பெற்றெடுத்த

கண்ணகியே,, சொர்ணத்தாயே,,,


நீரையும் நெருப்பையும் நிழலாக்கி

நிமிர்ந்து நின்ற நாயகியே,


சோலை விருட்சம் அம்மா-நீ

சொந்தம் நாங்கள்

துயரம் கண்டாயோ-எம்

நெஞ்சு கனக்க

நிலையகன்று சென்றனையோ,


காற்றானாய்

உன் கண்மணிகள்

கண்ணில் நீரை இறைத்து நின்றோம்-நீ

பாலூட்டி வளர்த்த

எம் தலைவன் பரிதவிப்பான்-அதை

மறந்தாயோ?,


நேற்றோடு இன்று நாள் நகரும்-உன்

நினைவுகள்

என்றும் சங்கமிக்கும்,

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018