சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை

ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.

ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.

கடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர். 

இதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018