சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் இலங்கை ₋ -இந்தியா பலப்பரீட்சை

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கையின் 50ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரானது தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை -– இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதும் இந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு போட்டித் தொடரானது இருபதுக்கு 20 போட்டியாக நடத்தப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகும் இத் தொடர் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இரவு போட்டியாக நடைபெறவுள்ளன.

இத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – இந்தியா மோதுகின்றன.

மார்ச் 8: பங்களாதேஷ் – இந்தியா

மார்ச் 10: இலங்கை – பங்களாதேஷ்

மார்ச் 12: இலங்கை -– இந்தியா

மார்ச் 14: பங்களாதேஷ் – இந்தியா

மார்ச் 16: இலங்கை – பங்களாதேஷ் ஆகிய

அணிகள் மோதுகின்றன. இத் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018