தேசிய நகர்வல ஓட்டப்போட்டி: தங்கம் வென்ற சந்திரதாசன், ஹிமாஷா

44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சந்திரதாசன் மற்றும் பெண்கள் பிரிவில் ஹிமாஷா மதுஷானி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.இவ் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரத்தினபுரியில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக தேசிய நகர்வல ஓட்டப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா கொல்ப் கழக புல் தரை மைதானத்தில் நடைபெற்றது.இதில் ஆண்களுக்கான போட்டிப் பிரிவில் மத்திய மாகாண வீரர் எஸ்.சந்திரதாசன் பந்தயத் தூரத்தை 33.25 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதில் இரண்டாம் இடத்தை மத்திய மாகாண வீரர் சமரஜீவவும் (33.31வினாடி), மூன்றாமிடத்தை ஊவா மாகாண வீரர் எரந்தவும் (33.33 வினாடி) வென்றனர்.இதில் பெண்கள் பிரிவில் கிழக்கு மாகாண வீராங்கனை ஹிமாஷா மதுஷானி தங்கப் பதக்க த்தை வென்றார்.

இவர் பந்தயத் தூரத்தை 39.49 வினாடிகளில் கடந்தார். அதேபோல் இரண்டாமிடத்தை ஊவா மாகாண வீராங்கனை ஷியாமலி அனுஷாவும் (40.19 வினாடி), மூன்றாமிடத்தை மத்திய மாகாண வீராங்கனை அனுரதியும் (40.19 வினாடி)வென்றனர்.44ஆவது தேசிய விழாவின் முதல் அங்கமாக நடைபெற்ற இப்போட்டியில் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 82 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். 

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018