அஞ்சலிக்கு சிபாரிசு செய்வதை கைவிட்ட ஜெய்

தன்னுடைய காதலியான அஞ்சலிக்கு படங்களில் நடிப்பதற்கு சிபாரிசு செய்வதை கைவிட்டிருக்கிறார் நடிகர் ஜெய்.நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருந்து வந்தது. இருவரும் நெருக்கமாக பழகினார்கள். ஜெய் வீட்டுக்கு அஞ்சலி அடிக்கடி போய் வந்தார். ஜெய் தனது படங்களுக்கு அஞ்சலியை சிபாரிசு செய்தார். இதைத்தொடர்ந்து, ‘பலூன்’ என்ற படத்தில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்தார்கள். 

இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெய்–அஞ்சலி காதல் திடீரென்று முறிந்து போனது. அஞ்சலி, இப்போது ஆந்திராவிலேயே தங்கியிருந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஜெய் தனது படங்களுக்கு அஞ்சலியை சிபாரிசு செய்வதை கைவிட்டார். 

அவர் நடிக்கும் ‘நீயா–2’ படத்தில், அவருக்கு ஜோடிகளாக வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இந்த நிலையில், ‘நீயா–2’ படத்தில், தற்போது ராய்லட்சுமியும் இணைந்து இருக்கிறார். ஜெய்–ராய்லட்சுமி ஜோடி ஏற்கனவே ‘வாமணன்’ படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாக தமிழில் இரண்டாம் பாக படங்கள் நிறைய தயாராகி வருகின்றன. அந்த வரிசையில், கமல்ஹாசன்–ஸ்ரீப்ரியா ஜோடியாக நடித்து வெற்றி பெற்ற ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில், ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா, ராய்லட்சுமி ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ‘எத்தன்’ படத்தை இயக்கிய சுரேஷ், இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.

தனது துணையை கொன்றவர்களை ஒரு பாம்பு பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படம், ‘நீயா.’ இதன் இரண்டாம் பாகம், பழைய படத்தின் தொடர்ச்சியா? அல்லது வேறு கதையம்சம் கொண்ட படமா? என்பதற்கான விடை, விரைவில் தெரிந்து விடும்.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018