டிரம்பின் விசா தடைக்கு எதிராக வழக்குகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் டிரம்பின் புதிய 'விசா' தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்hவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற  டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் ஈரான், ஈராக், சோமாலியா, லிபியா, சூடான், ஏமன் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகள் மீது 90 நாட்கள் விசா தடை விதித்து உத்தரவிட்டார். அனைத்து அகதிகளும் நுழைய தற்காலிக தடையும் விதித்திருந்தார்.

இந்த உத்தரவுக்கு அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் கடும் எதிர்ப்பு நிலைமைகள் ஏற்பட்டிருந்தன. அமெரிக்காவில் விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். பெடரல் நீதிமன்றங்களில் இந்த உத்தரவுக்கு தடை பெறப்பட்டது.

அதை தொடர்ந்து புதிதாக விசா தடை உத்தரவை சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் பிறப்பித்தார். அதில் ஈராக் நாட்டுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது. சிரியா, சூடான், லிபியா, ஏமன், ஈரான் ஆகிய ஆறு நாடுகளுக்கான விசா தடை தொடர்ந்து நீடிக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடை உத்தரவு முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அமெரிக்காவின் பாதுகாப்பை கருதி கொண்டு வரப்பட்டது என டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் அமெரிக்க மக்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. நியூயோர்க், வொஷிங்டன், ஒரிகான், மசாசூசெட்ஸ், ஹவாய் உள்ளிட்ட மாகாண நீதிமன்றங்களில் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018