தேசிய அரசாங்கம் குறித்த இறுதி நிலைப்பாட்டை பாராளுமன்றில் தெரிவித்தார் பிரதமர்

இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து பயணிக்கும். நாம் பாராளுமன்றத்திற்கு முன்வைத்த யோசனையை இரத்து செய்யவில்லை. அத்துடன் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதாக பாராளுமன்றத்திற்கு பிரேரணையொன்றை மாத்திரமே நாம் முன்வைத்தோம். அதனைவிடுத்து நாம் ஒப்பந்தகளோ அல்லது ஆவணங்களோ முன்வைக்கவில்லை.

ஆகையால் தேசிய அரசாங்கத்தை கொண்டு போவதற்கு எழுத்து மூல ஆவணங்களோ ஒப்பந்தங்களோ அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

இதன்படி அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய அரசாங்கத்தை நாம்   தொடர்ந்து கொண்டு செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அரசியலமைப்பின் பிரகாரம் தொடர்ந்து கொண்டு செல்வோம். இது தொடர்பாக நானே பாராளுமன்றத்தில் யோசனையொன்றை முன்வைத்தேன். ஆகவே எமது பயணத்தை இரத்து செய்யவில்லை என்றார்.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018