நாளை ஆரம்­ப­மாகி­ன்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் ஆலய பெரு­விழா

இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­ க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா நாளை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்ப ­மா­கின்­றது. 

நாளை வெள்­ளிக்­கி­ழமை மாலை 4 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் நற்­க­ருணைப் பெரு­விழாத் திருப்­பலி வழி­பா­டுகள் நடை­பெறும். நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை காலை 7 மணிக்கு யாழ்.மறை­மா­வட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை மற்றும் காலி மறை­மா­வட்ட ஆயர் றேமன் விக்­கி­ர­ம­சிங்க ஆண்­டகை ஆகியோர் இணைந்து பெரு­விழா கூட்டுத் திருப்­பலியை நிறை­வேற்­ற­வுள்­ளனர். 

இப்பெரு­விழாத் திருப்­ப­லியில் இந்­தி­யாவின் சிவ­கங்கை மறை­மா­வட்ட குரு­மு­தல்வர் தலை­மையில் அருட்­தந்­தை­யர்கள், அருட்­ச­கோ­த­ரிகள் கலந்­து­கொள்­ளவுள்ளனர். அத்­துடன் இந்­தி­யா­வி­லி­ருந்து 3 ஆயி­ரத் துக்கும் மேற்­பட்ட யாத்­தி­ரிகர்கள் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும் இந்­திய யாத்­தி­ரிகர்கள் சார்பில் கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆல­யத்­திற்­கான கொடி­மரம் அங்­கி­ருந்து எடுத்­து­வ­ரப்­ப­ட­வுள்­ள­தாக நெடுந்தீவு பங்குத்தந்தை எமில்போல் அடிகளார் தெரிவித்தார்.

கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய பெரு­வி­ழா­வுக்கு இம்­முறை இலங்கை மற்றும் இந்­திய நாடு­க­ளி­லி­ருந்து 10 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பக்­தர்கள் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதற்கு ஏற்­ற­வ­கையில் போக்­கு­வ­ரத்து மற்றும் அத்­தி­யா­வ­சிய விசேட ஏற்­பா­டுகள் என்­பன அங்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கச்­ச­தீ­வுக்கு செல்­வ­தற்கு வச­தி­யாக யாழ்.மத்­திய பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து 23ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை 3.30 மணி­யி­லி­ருந்து குறி­காட்­டுவான் இறங்­கு­து­றைக்கு பேருந்து சேவைகள் இடம்­பெறும். இதற்கு மேல­தி­க­மாக தனியார் பேருந்து போக்­கு­வ­ரத்து சேவை­களில் ஈடு­­படும். அன்­றைய தினம் காலை 5 மணி­யி­லி­ருந்து நண்­பகல் 2 மணிவரை குறி­காட்­டுவான் இறங்­கு­து­றை­யி­லி­ருந்து கச்­ச­தீ­வுக்­கான கடல்­வழி படகுச் சேவைகள் இடம்­பெறும். 

படகுச் சேவைக்­கான ஒரு­வழி கட்டண­ மாக குறி­காட்­டு­வானிலிருந்து 300 ரூபாவும் நெடுந்­தீவில் இருந்து கச்­ச­தீ­வுக்கு ஒரு­வழி பயணக் கட்­ட­ண­மாக 225 ரூபாவும் அற­வி­டப்­படும். சேவையில் ஈடு­படும் பட­குகள் யாவும் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே சேவைக்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வுள் ­ளது. பய­ணி­களின் பாது­காப்புக் கருதி பாது­காப்பு அங்­கியை அணி­வது  கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­வி­ழா ஒழுங்­கு­க­ளுக்­கு­ரிய பிர­தான பொறுப்பை கடற்­ப­டை­யினர் ஏற்­றுள்­ளனர். அதேபோன்று ஏனைய துறை­யினர் ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்­டதன்படி தத்­த­மது சேவை­களை மேற்­கொள்­வார்கள். பக்தர்­ களின் நலன்­க­ருதி நிரந்­தர மல­சலகூட வச­திகள் மற்றும் மேல­தி­க­மாக தற்­கா­லிக மல­சலகூட வச­திகள் என்­ப­னவும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

கச்­ச­தீவு திருத்­தல திரு­வி­ழா­வுக்கு வரும் யாத்­தி­ரி­கர்கள் தமக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை தாமே எடுத்து­ வர வேண்டும் எனவும் அறி­வு­றுத்­தப்பட் ­டுள்­ள­துடன் கச்சதீவு பிரதேசத்தில் பொலித் தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் படகுச் சேவை இடம்பெறும் போது கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
வவுனியா
சுவிஸ்
7 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 12, 2018
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
யாழ். கட்டுவன்
கனடா
10 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 11, 2018