போராட்டத்தை கைவிடோம் ஒரே நம்பிக்கை சர்வதேசமே - கிளிநொச்சியில் உறவினர்கள் அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் பெரும் கவனயீரப்புப் போராட்டத்தை கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் நடத்தினர்.

'எமது உறவுகள் தொடர்பில் பதில் தரக்கூடியது சர்வதேசம் மட்டுமே. எமது இறுதி நம்பிக்கை அதுவாகவே உள்ளது. உறவுகளுடன் சேரும் வரை எமது போராட்டம் தொடரும்" என்று இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

காலை 9.30 மணி தொடக்கம் மதியம் ஒரு மணிவரை தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள், மதகுருமார், சிவில் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தென்னிலங்கை அமைப்புகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கண்ணீர் மல்கத் தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் அவர்களை விடுவிக்குமாறும் தெரிவித்து அவர்கள் கதறி அழுதனர். போராட்டத்தின் முடிவில் கருத்துரைத்த கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்பின் தலைவி கலாரஞ்சனி கூறுகையில்:

"எங்கள் போராட்டம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. ஜனாதிபதியும் எங்கள் விடயத்தில் கைவிரித்து விட்டார். காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் உறவுகள் இருக்கிறார்களா? இருக்கிறார்கள் என்றால் எங்கு? எப்போது அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்? அல்லது அவர்கள் உயிரோடு இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? என்பவற்றையே நாம் கேட்கிறோம். இவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய அரசு பொறுப்பற்று நடக்கிறது.

தமிழ் அரசியல் தரப்புகள் கட்சி பேதங்களை மறந்து எங்களுக்காக ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறே சிவில் அமைப்புகளும் குரல் எழுப்ப வேண்டும். இறுதிப் போரில் இனவழிப்புக்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு வழங்கியது. தற்போதைய நிலையில் எங்களுக்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை சர்வதேசம் மட்டுமே" என்றார்.

Ninaivil

திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
வவுனியா
சுவிஸ்
7 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 12, 2018
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
யாழ். கட்டுவன்
கனடா
10 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 11, 2018