விஜய் மல்லையா, நீரவ் மோடி விவகாரத்தை மையப்படுத்தி உருவாகும் கமலின் இந்தியன் 2?

நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையாவின் விவகாரத்தை மையப்படுத்தி கமலின் இந்தியன் 2 படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது கமல்ஹாசனின் புதிய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் கட்சியை அறிவித்தார். இதைத் தொடர்ந்து கமலின் அரசியல் நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்த படி இந்தியன் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் 2ம் பாகத்தில் விறுவிறுப்பாக நடிக்கயிருக்கிறார்.அதற்கான முதல்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கிட்டத்தட்ட 900 கோடியை வங்கியிடமிருந்து கடனாக பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா பற்றியும், பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து ரூ.11,400 கோடி மோசடி செய்த நீரவ் மோடி பற்றியும் கமலின் இந்தியன் 2 படம் முற்றிலும் சித்தரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்விரு பிரச்சனைகள் பற்றி மத்திய அரசு தற்போது வரை மௌனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

தற்போது புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல் இவ்விரு முக்கிய பிரச்சனைகள் பற்றி தன்னுடைய படத்தில் எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, கமல் – ஷங்கர் கூட்டணி இந்தியன் 2 படத்தின் தலைப்பை லீடர் –ஆக மாற்றுவது குறித்து ஆலோசித்து வந்ததாக கூறப்படுகிறது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018