விஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்

சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் விஸ்வாசம் படக்குழுவில் முக்கிய பிரபலம் ஒருவர் இணையவிருக்கிறார்.அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

சமீப காலமாகவே யோகி பாபு இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து படங்களிலும் ஒரு சிறிய கதாபாத்திரத்திலாவது வந்து சிரிக்க வைத்துவிட்டு செல்கிறார் யோகி பாபு. அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் 62-வது படமாக உருவாகும் படத்திலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், அஜித் படத்திலும் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இவ்வாறாக ஒரே நேரத்தில் இரு முன்னணி நடிகர்கள் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பை 4 மாதங்களில் முடிக்க படப்பிடிப்பு முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018