குளிர்கால ஒலிம்பிக் போட்டி: ரஷியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்

ஊக்கமருந்து சர்ச்சைகளுக்கு மத்தியில் பியாங்சாங் குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை 15 வயது ஸ்கேட்டிங் வீராங்கனை ஜாகிடோவா வென்றுத் தந்தார்.ஆண்களுக்கான 1,000 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் நெதர்லாந்து வீரர் கிஜெல்டு நுயிஸ் 1 நிமிடம் 07.97 வினாடிகளில் இலக்கை எட்டி 2-வது தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். அவரை விட 0.04 வினாடி மட்டுமே பின்தங்கிய நார்வே வீரர் ஹவர்ட் லோரென்ட்ஜென் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

ஆண்களுக்கான ஐஸ்ஆக்கி போட்டியின் அரைஇறுதி ஆட்டங்களில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் கனடாவையும், ரஷியா 3-0 என்ற கோல் கணக்கில் செக்குடியரசையும் தோற்கடித்தது. நாளை நடைபெறும் தங்கப்பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் ரஷியா-ஜெர்மனி அணிகள் மோத உள்ளன.

இந்த ஒலிம்பிக் திருவிழா நாளை நிறைவடைய உள்ள நிலையில் நார்வே அணி 13 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலம் என்று 37 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்திலும், ஜெர்மனி 13 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.

இதற்கிடையே மேலும் ஒரு ரஷியர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். சக்கரம் பொருத்தப்பட்ட குட்டி வாகனத்தில் 2 பேர் அமர்ந்து, குறுகிய வளைவுகள் கொண்ட சரிவான பாதையில் சீறிப்பாயக்கூடிய ‘பாப்ஸ்லை’ பந்தயத்தில் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்ட ரஷிய வீராங்கனை நட்ஜா செர்ஜீவா ஊக்கமருந்து பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்துள்ளது. இதய பிரச்சினைக்காக அவர் எடுத்துக் கொண்ட மருந்து, உலக ஊக்கமருந்து தடுப்பு கழகத்தால் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இருப்பதாக ரஷிய பாப்ஸ்லை பெடரேஷன் கூறியுள்ளது.

ஏற்கனவே கலப்பு இரட்டையர் ‘கர்லிங்’ பிரிவில் தனது மனைவியுடன் இணைந்து வெண்கலப்பதக்கம் வென்ற ரஷிய வீரர் அலெக்சாண்டர் ருஷெல்னிட்ஸ்கி ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதால், அவரது பதக்கம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018