ஸ்ரீதேவி...சினிமாவின் 50 ஆண்டு சகாப்தம்

தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி இந்திய திரைப்படத் துறையில் புகழ் பெற்று விளங்கினார். 1969 ஆம் ஆண்டு இயக்குநர் எம் ஏ திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த 'துணைவன்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். 

அதன் பிறகு குழந்தை நட்சத்திரமாக 'நம்நாடு' கனிமுத்து பாப்பா' 'வசந்த மாளிகை' போன்ற பல படங்களில் நடித்தார். இவர் கதாநாயகியாக அறிமுகமானது 1976 ஆம் ஆண்டு இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'மூன்று முடிச்சு' திரைப்படமாகும். 1977 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். 

அதன் பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் சில படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது. அதன் பின் மலையாள திரைப்படங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதற்கு சான்றாக 'ஆலிங்கனம்' குட்டவும் சிக்ஷையும்' 'ஆத்ய பாடம்' ' ஆ நிமிஷம்' போன்ற திரைப்படங்களை கூறலாம்.

1975 ஆம் ஆண்டு இயக்குநர் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'ஜுலி' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் வெளிவந்த சோல்வா சாவன்' (16 வயதினிலே) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி கண்ட 'மூன்றாம் பிறை' திரைப்படம் ஹிந்தியில் சத்மா' என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது. 

அதன் பின் வெளிவந்த 'ஹிம்மத்வாலா' 'சாந்தினி' திரைப் படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஸ்ரீதேவியும் இணைந்தார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்த ஸ்ரீதேவி 1996 ஆம் ஆண்டு நடிகர் அனில்கபூரின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனிகபூரை மணமுடித்தார். 

அதன் பின் சினிமாவை விட்டு விலகி இருந்த ஸ்ரீதேவி 14 ஆண்டுகளுக்குப் பின் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்'திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்கலானார். இதுவரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏறக்குறைய 275 படங்களில் நடித்திருக்கிறார். ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஸ்ரீதேவி நடிப்பில் தமிழில் வெளிவந்த சில முக்கிய திரைப்படங்கள்


1.துணைவன் - குழந்தை நட்சத்திரம்  

2.நம்நாடு - குழந்தை நட்சத்திரம்  

3.பாபு - குழந்தை நட்சத்திரம்  

4.கனிமுத்து பாப்பா - குழந்தை நட்சத்திரம் 5.வசந்த மாளிகை - குழந்தை நட்சத்திரம் 6.பாரதவிலாஸ் - குழந்தை நட்சத்திரம் 7.திருமாங்கல்யம் - குழந்தை நட்சத்திரம் 8.மூன்று முடிச்சு - கதாநாயகி  

9.16 வயதினிலே - கதாநாயகி 10.காயத்ரி - கதாநாயகி 11.கவிக்குயில் - கதாநாயகி  

12.சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு - கதாநாயகி  

13.வணக்கத்துக்குரிய காதலியே - கதாநாயகி 14.டாக்சி டிரைவர் - கதாநாயகி  

15.இது எப்படி இருக்கு - கதாநாயகி  

16.மச்சான பாத்தீங்களா - கதாநாயகி  

17.மனிதரில் இத்தனை நிறங்களா - கதாநாயகி 18.முடிசூடா மன்னன் - கதாநாயகி  

19.வைலட் பிரேம்நாத் - துணை நடிகை  

20.சிகப்பு ரோஜாக்கள் - கதாநாயகி  

21.ப்ரியா - கதாநாயகி 22.தர்மயுத்தம் - கதாநாயகி 23.கல்யாணராமன் - கதாநாயகி  

24.பகலில் ஓர் இரவு - கதாநாயகி  

25.கவரிமான் - துணை நடிகை 26.நீலமலர்கள் - கதாநாயகி  

27.பட்டாக்கத்தி பைரவன் - கதாநாயகி 28.லக்ஷ்மி - கதாநாயகி  

29.தாயில்லாமல் நானில்லை - கதாநாயகி  

30.குரு - கதாநாயகி  

31.ஜானி - கதாநாயகி  

32.வறுமையின் நிறம் சிகப்பு - கதாநாயகி 33.விஸ்வரூபம் - கதாநாயகி  

34.பாலநாகம்மா - கதாநாயகி  

35.சங்கர்லால் - கதாநாயகி  

36.மீண்டும் கோகிலா - கதாநாயகி  

37.ராணுவவீரன் - கதாநாயகி  

38.மூன்றாம் பிறை - கதாநாயகி  

39.தனிக்காட்டு ராஜா - கதாநாயகி 40.போக்கிரிராஜா - கதாநாயகி 41.வாழ்வே மாயம் - கதாநாயகி  

42.அடுத்த வாரிசு - கதாநாயகி 43.சந்திப்பு - கதாநாயகி  

44.நான் அடிமை இல்லை - கதாநாயகி 45.இங்கிலீஷ் விங்கிலீஷ் - கதாநாயகி 46.புலி - துணை நடிகை

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018