ஐ.எஸ்.எல். கால்பந்து - கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா அணியை 4-3 என்ற கணக்கில் டெல்லி அணி வீழ்த்தியது.

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

போட்டியின் தொடக்கத்தில் டெல்லி அணியின் கலு உசே 22வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கொல்கத்தா அணியின் கேப்ரியல் கிச்சிரோ 37வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தது.

இதைத்தொடர்ந்து, போட்டியின் இரண்டாவது பாதியில் ராபி கேன் 52 வது நிமிடத்திலும், 58 வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டெல்லி அணியை சேர்ந்த கலு உசே 69வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். செல்லியாசென் சிங் 71வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார். இதனால் 3-3 என சமனிலை ஆனது.

ஆட்டத்தின் இறுதியில், மதியாஸ் மிராபஜே ஒரு கோல் அடித்தார். இது டெல்லி அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில், டெல்லி அணி கொல்கத்தாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, டெல்லி அணி 16 போட்டிகளில் 4 வெற்றி, 3 டிரா, 9 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று பட்டியலில் எட்டாம்  இடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தா அணி 13 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது. 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018