இசைப்புயலில் இசை மழை 13ஆம் திகதி சார்ஜாவில்

ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் உள்ள மிகப் பிரபலமான கிரிக்கெட் மைதானத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் இங்கு வாழும் தமிழர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

ரோஜா படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன ஆசை பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ஹொலிவுட் வரை சிறகடித்துப் பறந்தவர் ஏ.ஆர். ரஹ்மான்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு இன்டிமேட் என்ற இசை சுற்றுலா மேற்கொண்டிருந்தார். அங்குள்ள முக்கிய பெருநகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அந்த நிகழ்ச்சிகளுக்கு அமெரிக்க மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

பின்னர், பிரிட்டன் நாட்டிலும் தனது இன்டிமேட் இசை சுற்றுலாவை மேற்கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி லண்டன் நகரிலும், 24ஆம் திகதி  பெர்மிங்ஹம் நகரிலும், 29ஆம் லீட்ஸ் நகரிலும், 30ஆம் திகதி மான்செஸ்ட்டர் நகரிலும் அவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து, எதிர்வரும் 13ஆம் திகதி சார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் அமரும் அளவுடைய இந்த மைதானத்தில் நடைபெறும் நிகழ்சிக்காக 5000 திர்ஹம் முதல் 2 லட்சம் திர்ஹம் வரை கட்டணம் கொண்ட டிக்கெட்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018