ஆளும் தரப்பு வெளிநடப்பு; 21ஆம் திகதி வரையில் சபை ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர் தமது அணிக்கு பதில் தலைவரை நியமிக்க கோரி வாதப்பிரதிவாதங்களை முன்வைத்து கோசங்களை தொடர்ச்சியாக வெளியிட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஆளும் தரப்பினர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதன்காரணமாக எதிர்வரும்  21 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணி வரையில் சபை நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கூட்டு எதிரணியின் உறுப்பினர்களான சாமல் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் தமது பாராளுமன்றக்குழுவின் தலைவரான தினேஷ்குணவர்த்தனவுக்கு ஒருவாரகால தடை விதிக்கப்பட்டமையால் பதில் தலைமைவேண்டும் என்ற நியாயப்பட்டை முன்வைத்து தர்க்கம் செய்தனர்.

அத்தோடு தேசிய சுதந்திரமுன்னணியை சுயாதீன அரசியல் கட்சியாக அறிவிக்குமாறு அதன் தலைவரான விமல் வீரவன்ஸவும் கடுமையாக வாதம் செய்தார். 

இவர்களின் தர்க்கத்துக்கு அதிகளவு நேரம் செல்வதாகவும் இவர்கள் சபாநாயகரையும், பாராளுமன்றத்தையும் அச்சறுத்துவதாகவும் ஐ.தே.க உறுப்பினர் அப்புகாமி சுட்டிகாட்டியதோட சபைமுல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவர்களுக்கு நேரம் வழங்வேண்டாமென சபாநாயகருடன் வாதிட்டார். 

இருப்பினும் சாபாநாயகர் ஐந்து நிமிடங்கள் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டபோதும் சபை முதல்வர் ஏற்க மறுத்து வெளிநடப்புச் செய்தார். அதனைத்தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களும் வெளிநடப்புச்செய்தனர். 

பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாகவும் தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதற்தடவையாகவும் ஆளும் தரப்பு வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து  கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் எமது போராட்டம் வெற்றி, வெற்றி, எமது போராட்டம் வாழ்க வாழ்க என கோசமிட்டவாறு சபையிலிருந்து வெளியேறிச்சென்றனர்

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018