முன்னணி வீரர்கள் ஓய்வால் முத்தரப்பு டி20 தொடர் மதிப்பிழக்காது- இலங்கை

விராட் கோலி, டோனி, பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஓய்வால் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மதிப்பிழக்காது என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா, இலங்கை, வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இலங்கையில் நடக்கிறது. இந்த தொடர் 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு நிதாஹாஸ் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் தென்ஆப்பிரிக்கா தொடரில் தொடர்ந்து விளையாடியதன் காரணத்தாலும், ஐபிஎல் தொடருக்குப்பின் தொடர்ந்து வெளிநாட்டு தொடர்கள் இருப்பதாலும் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் இந்தியா தொடரை சந்திக்கிறது.

முன்னணி வீரர்கள் இல்லாததால் தொடருக்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறி வந்த நிலையில், வீரர்கள் ஓய்வால் முத்தரப்பு டி20 தொடர் மதிப்பிழக்காது என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில் ‘‘இலங்கை இந்தியாவிற்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட எந்த வீரருக்கும் எதிராக நாங்கள் விளையாடவில்லை. எங்கள் அணியிலும் மேத்யூஸ், குசால் பெரேரா, அசேலா குணரத்னே, லசித் மலிங்கா ஆகியோர் இடம்பெறவில்லை’’ என்றார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018