அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்திக்க நடவடிக்கை: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 6 வாரத்துக்குள் அமைக்கவேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரை சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமரிடம் நேரம் வாங்கமுடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது.

பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி நடத்தி வரும் தமிழக அரசு மீது கொஞ்சம் கூட மத்திய அரசு நன்றி காட்டவில்லை. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

‘ஒகி’ புயல் நிவாரண தொகையாக பிரதமரிடம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.9 ஆயிரத்து 300 கோடி கேட்டார். ஆனால் ரூ.133 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிர்காலமே இல்லை என்பதால், நிதி ஒதுக்குவதிலும் பிரதமர் நரேந்திர மோடி அக்கறை காட்டவில்லை.மேலும்அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு திருநாவுக்கரசர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் ஒலிக்கப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- இதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு தமிழ் மற்றும் தமிழர் மீதான தாக்குதல். பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் இது தெரியாமல் போனது வருத்தமே...

கேள்வி:- காஞ்சீபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் முதியோர் இல்லம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிறதே?

பதில்:- இதுகுறித்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து அரசு விசாரிக்கவேண்டும். உண்மைகள் வெளிச்சத்துக்கு வரவேண்டும்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

பேட்டியின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா மற்றும் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018