ஸ்ரீதேவியை அவங்கம்மா யாருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார் தெரியுமா?

ஸ்ரீதேவி பற்றி பலருக்கும் தெரிந்திராத சில தகவல்களை தெரிந்து கொள்க. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி தான். ஸ்ரீதேவி பற்றி பலருக்கும் தெரிந்திராத தகவல்கள் இதோ,

இந்தி படமான ஜூலியில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஸ்ரீதேவி. 1979ம் ஆண்டு ஸ்ரீதேவி சொல்வா சாவன் என்ற படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயின் ஆனார். ஸ்ரீதேவி முதலில் இந்தியில் பேச சிரமப்பட்டுள்ளார். அதனால் சாந்தினி(1989) படம் வரைக்கும் அவருக்கு நடிகை நாஸ் டப்பிங் பேசியுள்ளார்.

ஹாலிவுட் படமான ஜுராசிக் பார்க்கில் நடிக்க ஸ்ரீதேவிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் பாலிவுட்டில் பிசியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டார். அதே போன்று பாகுபலி படத்தில் சிவகாமி தேவியாக நடிக்க வந்த வாய்ப்பையும் அவர் ஏற்க மறுத்தார்.

ஸ்ரீதேவியின் தாய் தனது மகளை டாக்டர் ராஜசேகருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பியுள்ளார். அப்போது ராஜசேகர் நடிகராகவில்லை ஆனால் ஸ்ரீதேவியோ பெரிய ஸ்டார். ஒரு நடிகையை மணக்க வேண்டாம் என்று கூறி ராஜசேகரின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் ராஜசேகர் நடிகை ஜீவிதாவை மணந்தார்.

1985ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை அதிகம் சம்பளம் வாங்கிய நடிகை ஸ்ரீதேவி. பட விஷயத்தில் ஸ்ரீதேவிக்கும், ஜெயபிரதாவுக்கும் இடையே போட்டி, பகை இருந்தது. ஜெயபிரதா நடிக்கவிருந்த நாகினா படத்தில் ஸ்ரீதேவி நடித்தார்.

1979ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவின் வெற்றி ஜோடி கிருஷ்ணா-ஸ்ரீதேவி. அவர்கள் இருவரும் சேர்ந்து 29 படங்களில் நடித்துள்ளனர்.


Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018