டெல்லி அழைத்து செல்லப்படுகிறார் கார்த்தி சிதம்பரம்! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் டெல்லி அழைத்துவரப்படுகிறார். இங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரிடம் விசாரணையை தொடர சிபிஐ முடிவு செய்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்நிலையில் நீதிமன்ற அனுமதியோடு லண்டன் சென்று இன்று சென்னை திரும்பிய நிலையில் அவரை சிபிஐ சென்னை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தது.

சென்னை விமான நிலையத்தில் பெயர் குறிப்பிடப்படாத பகுதியில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவரை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டெல்லி அழைத்து செல்கிறார்கள்.

டெல்லி நீதிமன்றத்தில் மாலை 4மணிக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கைவிடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே விமானத்தின் பிஸினஸ் கிளாசில் கார்த்தி சிதம்பரம் டெல்லி செல்ல சம்மதிக்கவில்லை என்றும், பிசினஸ் கிளாசில் அழைத்து செல்ல வற்புறுத்தியதாகவும், சில வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018