ஸ்பெயினில் விளையாடுவார்களா, தமிழக வீரர்கள்?

வெறிச்சோடிக் கிடக்கும் அந்த மைதானத்தில், கால்பந்தாட்ட அணியினர் விளையாடத் தொடங்கியதுமே, நமக்குள் உற்சாகம் மட்டுமல்ல, தன்னம்பிக்கையும் ஊற்றெடுக்கிறது. களத்தில் விளையாடிப் பயிற்சி பெறும் அந்த வீரர்களில் ஆறு பேர், ஸ்பெயின் நாட்டில் நடக்க உள்ள மூளை வளர்ச்சி குன்றியோர் பிரிவுக்கான சி.பி.உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடுவதற்குத் தேர்வாகியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஸ்பெயின் சென்று விளையாடுவார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

மூளை வளர்ச்சி குன்றியோர் பிரிவில் சி.பி.கால்பந்து போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் மூளைவளர்ச்சி குன்றியோருக்கான சங்கம் நடத்திவருகிறது. இப்போட்டிகளில் ஒரு அணியில் 7 பேர் விளையாடுகின்றனர். இப்போட்டியில் மூளை வளர்ச்சி குன்றியோருடன் மாற்றுத்திறனாளிகளும் சேர்ந்து விளையாடுவார்கள். உலக அளவில் 70 நாடுகளில் இந்த விளையாட்டு பிரசித்தி பெற்றிருந்தாலும், இதுவரை உலக அரங்கில், இந்தியா இவ்விளையாட்டில் முத்திரை பதித்தது இல்லை. அரசின் பாராமுகம் தவிர அதற்கு வேறெந்தக் காரணமும் இல்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் பட்டியலில் இருக்கும் விளையாட்டுகளில் பிரத்யேகமாக உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவதும் இந்த விளையாட்டுக்குத்தான். மூளை வளர்ச்சி குன்றியோருக்கான இந்திய அசோசியேஷன் கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவுக்குள் இந்தப் போட்டியை நடத்திவருகிறது. இப்போது முதன்முதலாக உலக அரங்கில், பங்கெடுக்கும் வாய்ப்பு உலகக் கோப்பை போட்டியின் வாயிலாக இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

மூளை வளர்ச்சி குன்றியோருக்கான பிரிவில் இந்திய அளவிலான சி.பி.கால்பந்து போட்டி கடந்த டிசம்பர் மாதத்தில் கோவாவில் நடந்தது. இதில் தமிழக அணி 2-வது இடத்துக்கு வந்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய 8 பேரை தேர்ந்தெடுத்து இந்திய அணியை அமைத்தனர். அந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம்பெற்றனர். தொடர்ந்து தெற்காசிய அளவிலான போட்டி நேபாளத்தில் நடந்தது. அதில் இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை போட்டிக்கு விளையாடவும் இந்த அணி தேர்வு பெற்றுள்ளது.

மொத்தம் ஏழு பேர் மட்டுமே விளையாட உள்ள இந்திய அணிக்கு மாற்று ஆட்டக்காரர்கள் உட்பட 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். களத்தில் இறங்கி விளையாட உள்ள ஏழு பேரில் ஆறு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தப் போட்டிகள், வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஸ்பெயின் நாட்டில் நடக்கிறது.

“ஆறு வீரர்களும், போட்டிகள் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பே, ஸ்பெயினுக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள தட்பவெப்பநிலை பழக வேண்டும். அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும். முக்கியமாக, நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும். அவர்களது பொருளாதாரச் சூழலில் அது சாத்தியம் இல்லாதது” என்கிறார் பயிற்சியாளர் சித்தேஸ்வரன்.

சேலத்தில் டால்பின் விளையாட்டு அகாடமியை நடத்தி வரும் சித்தேஸ்வரன், தமிழகம் முழுவதும் பயணித்து, திசைக்கு ஒருவராய் இருந்தவர்களை, ஒருங்கிணைத்து மூளை வளர்ச்சி குன்றியோர் பிரிவில் விளையாடுவதற்கென்று ஓர் அணியை உருவாக்கியவர். தொடர் பயிற்சியளித்து தேசிய அளவிலும் தெற்காசிய அளவிலும் தொடர் வெற்றிகளை பெறவைத்ததோடு, அடுத்ததாக உலகக் கோப்பை போட்டிக்கும் தேர்வாக்கியுள்ளார். தற்போது இந்த அணியினருக்கு இலவசமாக சேலத்தில் தொடர்பயிற்சியும் அளித்துவருகிறார். இன்றுவரையிலும் இந்தப் பயிற்சிகள் தொடர்ந்து வருகின்றன. ஆனாலும் ஸ்பெயினுக்கு சென்று போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு, விளையாட்டு வீரர்களுக்கோ பயிற்சியாளருக்கோ பொருளாதாரப் பின்புலம் இல்லை.

சேலத்தை சேர்ந்த வீரரான ராபின் ரசால் முதலாமாண்டு கல்லூரி மாணவர். விபத்து ஒன்றில் ஒரு கையை இழந்தவர். அவரது தந்தை மரவேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார். சேலத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் மெளலி பாலாஜி 11-ம் வகுப்பு மாணவர். விபத்தில் கைவிரல்களைப் பறிகொடுத்தவர். அவரது தந்தை கூலித் தொழிலாளி. தேனியைச் சேர்ந்த செல்வபாலாஜி பத்தாம் வகுப்பு மாணவர். இவர் பிறவியிலேயே மூளைவளர்ச்சி குறைபாடு உடையவர். இவரது தந்தையும் கூலித் தொழிலாளி.

கோவையைச் சேர்ந்த சல்மானுக்கு வயது 20. இவரின் தந்தை காலமாகிவிட்டார். அம்மா வீட்டு வேலை செய்கிறார். இவர் பிறவியிலேயே ஒரு கை குறைபாடு உடையவர். கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் ஜெனீஸ் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர். சேலத்தைச் சேர்ந்த முகமது அப்சல் பத்தாம் வகுப்பு மாணவர், மூளை வளர்ச்சி குறைபாடு உடையவர். இவரது தந்தை வெளிநாட்டில் கூலி வேலை செய்கிறார். ஸ்பெயின் நாட்டுக்கு சென்று, முறையான பயிற்சியோடு இந்த அணி களம் காண்பதற்கு ரூ.15 லட்சம் வரை செலவாகும் என்கின்றனர். இவர்கள் முன் நிற்கும் கேள்வி, உலகக் கோப்பையை வென்றெடுப்பார்களா என்பது அல்ல. ஸ்பெயினுக்கு விளையாடச் செல்வார்களா என்பதுதான்!

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018