ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த திரண்ட நடிகர்கள் மற்றும் ரசிகர்கள்

மும்பை அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பாலிவுட் பிரபலங்கள் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரளாக கூடியுள்ளனர்.மலர்களால் ஸ்ரீதேவியின் உடல் மூடப்பட்டுள்ளதால் அவரது முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய ரசிகர்கள் தெரிவித்தனர்.

உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில இருந்து சுமார் 50 அடி தொலைவில் இருந்து பார்க்க தாங்கள் அனுமதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மதியம் 12.30 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்படும் என்று முன்னதாக கூறப்பட்ட நிலையில், இன்னும் அவரது உடலைக் காண வந்தும் பார்க்க முடியாமல் காத்திருக்கும் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்காடுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.இன்று மதியம் 2 மணிக்கு அங்கிருந்து பவன் ஹான்ஸ் வரை இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

துபாயிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் துபாயிலிருத்நு செவ்வாய்க்கிழமை இரவு 9.35 மணியளவில் மும்பை வந்து சேர்ந்தது.ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், போனி கபூரின் முதல் மனைவி மோனா கபூரின் மகன் நடிகர் அர்ஜுன் கபூர், போனி கபூரின் இளைய சகோதரர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் ஸ்ரீதேவியின் உடலுடன் இந்தியா திரும்பினர்.

மும்பை விமான நிலையத்துக்கு உடல் வந்து சேர்ந்தபோது போனி கபூரின் இன்னொரு இளைய சகோதரரான நடிகர் அனில் கபூர், அவரது மகள் சோனம் கபூர், தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோர் அங்கு இருந்தனர்.ஊடகங்கள், திரைத் துறையினர் மற்றும் ஸ்ரீதேவியின் ரசிகர்கள் ஆகியோருக்கு அவர்களுக்கு அளித்த ஒத்துழைப்பு மற்றும் பிராத்தனைக்காக அவரது குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இறுதிச் சடங்குகளுக்காக மும்பை அந்தேரியில் உள்ள கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஸ்ரீதேவி - போனி கபூரின் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நள்ளிரவில் வந்து ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.உடல் வைக்கப்படவுள்ள இடம் அமைந்திருக்கும் கடுமையான கூட்ட நெரிசல் நிலவுகிறது. போக்குவரத்தை காவல் துறையினர் நெறிப்படுத்தி வருகின்றனர்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018