4 வயதில் கலைப்பயணம்... 54 வயதில் இறுதி பயணம்: விடைபெறுகிறார் ஸ்ரீதேவி

ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பையில் மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. தற்போது அவரது இறுதி ஊர்வலம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புறப்பட்டது.

துபாயில் கடந்த வாரம் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து நேற்றைய தினம் எம்பாமிங் செய்யப்பட்டு இரவு அனில் அம்பானி அனுப்பிய தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள லோகன்ட்வாலாவில் உள்ள அவரது உடல் வந்தடைந்தது.

அந்தேரியில் உள்ள செலிபிரட்டிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலம் அந்தேரியிலிருந்து 7 கி.மீ. தூரம் கொண்ட வில்லே பார்லே பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு புறப்பட்டது. அங்கு மாலை 3.30 மணிக்கு ஸ்ரீதேவி உடல் மாநில அரசின் முழு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.


Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018