அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க மறுத்து தமிழர்களை மோடி உதாசீனம் செய்கிறார்: வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்க மறுப்பதன் மூலம் 8 ேகாடி தமிழர்களை பிரதமர் மோடி உதாசீனம் செய்கிறார் என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

மதிமுக பொதுச்  செயலாளர்  வைகோ சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது ; காவிரி விவகாரம் தொடர்பான  வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏற்புடையது இல்லை.

இருந்தாலும், 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க பிரதமர் மோடியிடம்  வலியுறுத்துவது என தீர்மானம் செய்யப்பட்டது. 

இதற்காக பிரதமரை சந்திக்க அவரது அலுவலகத்தில் நேரம் கேட்கப்பட்டது. ஆனால் தற்போது வரை நேரம் ஒதுக்கவில்லை. கர்நாடக மாநில  தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் செய்வதாகவே இதைப்  பார்க்கிறேன். ஒட்டு மொத்த 8 கோடி தமிழர்களை பிரதமர் மோடி உதாசீனம் செய்கிறார். எந்த ஒரு பிரதமருக்கும் இந்த அதிகாரப் போதை ஏற்பட்டது இல்லை. சர்வாதிகாரப் போக்கில் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடி தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நேரம் ஒதுக்க வேண்டும். 

இல்லையெனில் வரும் மார்ச் 6 ம் தேதி மதிமுகவின் பொதுக் குழுவில் முக்கியமான முடிவு எடுக்கப்படும். 

  ெபண்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கித்தரவேண்டாம். அவர்களை கண்டித்து வளர்க்க வேண்டும்.   ஒவ்வொரு வீட்டிலும் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018