பயங்கரவாதியை அழைத்தது யார்? : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

கனடா பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க, காலிஸ்தான் பயங்கரவாதிக்கு அழைப்பு விடுக்கப் பட்டதில், மத்திய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை' என, வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

வட அமெரிக்க நாடான, கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ருடியோ, சமீபத்தில், இந்தியா வந்திருந்தார்.அவருக்கு, மும்பையில் உள்ள, கனடா துாதரகம் சார்பில் வழங்கப்பட்ட விருந்தின் போது,காலிஸ்தான் பயங்கரவாதி, ஜஸ்பால் அத்வால் பங்கேற்றார். மேலும், டில்லியில் உள்ள, கனடா துாதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

கடைசி நேரத்தில், டில்லி நிகழ்ச்சியில் பங்கேற்க, அத்வாலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு திரும்பப் பெறப்பட்டது.இதற்கிடையே, கனடா பார்லிமென்டில், இது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, 'கனடா பிரதமரின் பயணத்தை சீர்குலைக்கும் வகையில், இந்திய அரசின் ஒரு கோஷ்டி செயல்பட்டு உள்ளது' என, கனடா பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டது.இதை, மத்திய அரசு மறுத்துள்ளது.

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ரவ்னீஷ் குமார் கூறியதாவது:கனடா பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க, காலிஸ்தான் பயங்கரவாதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், மத்திய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இதில், மத்திய அரசின் ஒரு கோஷ்டி செயல்பட்டதாகக் கூறப்படும் செய்தியில், எந்த அடிப்படை உண்மையும் இல்லை. அதை ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018