ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் உருகிய போனிகபூர்!

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது உடல் செவ்வாய்க்கிழமை இரவு மும்பை கொண்டுவரப்பட்டு நேற்று மலை இறுதிச்சடங்கு நிறைவடைந்தது. அவரது இறுதி அஞ்சலியில் பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.


ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் உருகிய போனிகபூர்!


இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் இரங்கல் குறித்து அவரது கணவர் போனிகபூர் ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒரு தோழி, மனைவி, 2 மகள்களின் தாயை இழந்தது வார்த்தைகளால் சொல்ல முடியாது. எங்களுக்கு ஆதரவாக இருந்த என் குடும்பம், நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், நலம் விரும்பிகள், ஸ்ரீதேவியின் எண்ணற்ற ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் உருகிய போனிகபூர்!


இந்நேரம் எனக்கும், ஜான்வி, குஷிக்கும் உறுதுணையாக இருக்கும் அர்ஜுன் மற்றும் அன்சுலாவை பெற்றிருப்பது ஆதரவாக உள்ளது. எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த ஈடுசெய்யமுடியாத இழப்பை எதிர்கொள்ள முயற்சிக்கிறோம். எனக்கு காதலி, துணைவி, தோழி, என் பிள்ளைகளுக்கு தாய், என் பார்ட்னர் என என் மகள்களுக்கு எல்லாமுமாய் இருந்தவர். அவரை சுற்றியே எங்கள் குடும்ப வாழக்கை நடந்தது.


ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் உருகிய போனிகபூர்!


ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ஸ்ரீயை பற்றி பேச வேண்டுமானால் அவரை பற்றி நல்ல விஷயங்களை பேசுங்கள். ஒரு நடிகையாக அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதற்காக அவரை மதியுங்கள். நடிகர் இறந்தாலும் வெள்ளித்திரையில் தொடர்ந்து ஜொலிப்பார்கள்.


இந்த நேரம் என் முழு கவனமும் குஷியையும், ஜான்வியையும் அக்கறையோடு நல்வழியில் நடத்துவதில் தான்.அவர் தான் எங்களின் வாழ்க்கை, தெம்பு மற்றும் நாங்கள் சிரிக்க காரணம். அவர் மீது அளவில்லா அன்பு வைத்துள்ளோம். உன் ஆத்மா சாந்தியடையட்டும். நீ இல்லாமல் எங்கள் வாழ்வு பழையபடி இருக்காது என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018