பா.ஜ.க.வுக்கு அடிபணியும் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட ஒருங்கிணைந்து போராடுவோம்: மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க.வுக்கு அடிபணியும் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட ஒருங்கிணைந்து போராடுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஏராளமான திமுகவினரும், முன்னணி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: பிறந்தநாள் செய்தியாக நீங்கள் தெரிவிக்க விரும்புவது என்ன? என்னுடைய பிறந்தநாள் செய்தியை விரிவான கடிதமாக ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன். 

இந்தியாவில் மதவாத அடிப்படையிலான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற பாஜக, அதற்கு அடிபணிந்து தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் குதிரை பேர அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட, நாம் அனைவரும் நாட்டின் நலன் கருதி, கட்சி பேதமில்லாமல் ஒருங்கிணைந்து, எதிர்த்துப் போரிட்டு, இந்த திராவிட மண்ணில் சமூகநீதியை உருவாக்கித் தந்திருக்கிற திராவிட இயக்கத்தின் தலைவர்கள் பெரியார், அண்ணா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் கனவுகளை நனவாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.  

அதற்கு திமுகவின் மேல்மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரையிலும் எல்லா அமைப்புகளிலும் உள்ள எல்லா தோழர்களும், நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து மக்களிடத்தில் தெருமுனை மற்றும் திண்ணைப் பிரசாரங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து பகுதிகளிலும் படிப்பகங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை என்னுடைய பிறந்தநாள் செய்தியாக மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 திராவிட இயக்க தலைவர்களின் எத்தனையோ கனவுகள் நிறைவேறியிருந்தாலும், இன்னும் பல கனவுகள் நிறைவேற வேண்டியிருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுகிற முயற்சியில் நான் தொடர்ந்து ஈடுபடுவேன். மதுவிலக்கு குறித்து கமல் கூறியவை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின்  கூறினார்.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018