19 வயதில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான ரஷித் கான்

ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளரான ரஷித் கான் சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் இந்தாண்டுக்கான ஐ.சி.சி. சிறந்த துணை வீரர் விருதும் பெற்றவர்.

இவர் கடந்த ஆண்டில் மட்டும் ஒருநாள் போட்டியில் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் வீழ்த்திய வீக்கெட்களை சராசரியாக கணக்கிட்டால் போட்டிக்கு 3.8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதுவே 2017-ம் ஆண்டில் ஒரு பவுலர் பெற்ற அதிக சராசரி ஆகும்.

இந்நிலையில், வருகிற 4-ம் தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பை தகுதி சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி விளையாட உள்ளது.

இந்த போட்டியில் இருந்து தற்போதைய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான அஷ்கர் ஸ்டானிக்சாய் மருத்துவ ஒய்வில் உள்ளதால், ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்க்கும் முதல் இளம் வீரர் என்ற பெருமையை 19 வயதாகும் ரஷித் கான் பெற்றுள்ளார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018