10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நாயுடு, ராவ் தேர்தல் கூட்டணி

பா.ஜ., காங். ஆகிய தேசிய கட்சிகளை கழற்றிவிட்டு வரும் 2019ம் ஆண்டு பார்லி.,லோக்சபா மற்றும் இரு மாநில சட்டசபை தேர்தல்களில் சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மத்திய ஆளும் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்துள்ள ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி முதல்வர் சந்திரபாபுநாயடு, கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவில் உள்ளார். 

இந்நிலையில் 2019-ம் ஆண்டு பார்லி., லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கும், தெலுங்கானா சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடக்க உள்ளது.இதையடுத்து சந்திரபாபு நாயுடுவும், சந்திரசேகரராவும் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஐதராபாத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் சந்திரபாபுநாயுடு பேசியது உள்ளூர் டி.வி. சானலில் ஒளிபரப்பாகியுள்ளது. அதில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், நாம் கூட்டணியில் இருந்த தேசிய கட்சி (பா.ஜ.) நம்மை புறக்கணித்துவிட்டது.

மற்றொரு தேசிய கட்சி( காங்.) நமக்கு அநீதி இழைத்துவிட்டது. இனி இரு பெரும் தேசிய கட்சிகளை நம்பி பயனில்லை. எனவே பக்கத்து மாநில கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என சூசகமாக பேசினார்.

இதிலிருந்து நாயுடுவும்,ராவும் மீண்டும் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு கூட்டணி வைத்தனர். அதன் பின்னர் 2019-ம் ஆண்டு கூட்டணி வைக்க உள்ளனர்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018