ஸ்ரீதேவிக்காக போனிக்கபூர் செய்த மிகப்பெரும் காரியம், தெரியாமலே போன பரிதாபம்!

ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்காக அவரின் கணவர் போனி கபூர் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்திருக்கிறார். அதற்கு முன்பே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி உயிர் இழந்தார். அவரின் இறுதிச்சடங்கு மாநில அரசு மரியாதையுடன் கடந்த புதன்கிழமை மும்பையில் நடைபெற்றது. ஸ்ரீதேவியின் மறைவால் பாலிவுட் பிரபலங்கள் கவலையில் உள்ளனர்.


ஸ்ரீதேவி தனது குடும்பத்துடன் மும்பை அந்தேரியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் வேறு வீட்டிற்கு மாறினார்கள். புதிய வீட்டிற்கு வந்தாலும் ஸ்ரீதேவிக்கு அந்தேரி வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தது. இதை அவர் தனது கணவரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.


ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்த போனி கபூர் அந்தேரி வீட்டை புதுப்பித்து வந்துள்ளார். ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அந்த வீட்டில் குடியேற திட்டமிட்டிருந்தார் போனி. மனைவியின் பிறந்தநாளுக்காக போனி செய்த ஏற்பாடுகள் வீணாகிவிட்டது. ஸ்ரீதேவி தனது ஆசை நிறைவேறாமலேயே இறந்துவிட்டார்.


ஜான்வி, குஷிக்கு போனியின் தம்பிகளான அனில் கபூர் சஞ்சய் கபூர் குடும்பத்தார் தற்போது ஆதரவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018