மும்பை டி20 லீக் போட்டியில் இருந்து சச்சின் மகன் அர்ஜூன் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இளம் வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் இடது கை பந்து வீச்சாளர். தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் அர்ஜுன் தற்போது புதிய பந்து வீச்சு முறைக்கு பயிற்சி எடுத்து வருகிறார். 

இந்நிலையில், வருகின்ற 11 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ள மும்பை டி20 லீக் போட்டியில் இருந்து அர்ஜூன் விலகி உள்ளார்.  அவர் புதிய பந்து வீச்சு முறைக்கு பயிற்சி எடுத்து வருவதால் அவரால் பங்கேற்க இயலவில்லை.  அவர் இன்னும் போட்டிக்கு தயாராக வில்லை. இச்சமயம் விளையாடினால் எந்த முறையில் விளையாடுவது என்ற குழப்பம் ஏற்படும். 

அர்ஜூன் தனது தந்தை சச்சினிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளார். போட்டிக்கு தயாராகவில்லை என்றால் விளையாட வேண்டாம் என சச்சின் அறிவுரை வழங்கியுள்ளார்.

அர்ஜூன் டெண்டுல்கரின் இந்த முடிவு போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்தும் இந்த டி20 மும்பை லீக் தொடருக்கான தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018