கார்த்தி சிதம்பரம் கைது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல: தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின்பேரில்தான், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அது, பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் தமிழ் தாமரை யாத்திரையை பாஜக தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஒருநாள் நடத்தப்பட்டு, பிரதமரின் தமிழ்நாட்டு வருகையையொட்டி இடைவெளி ஏற்பட்டது.

மீண்டும் இன்று (மார்ச் 2) முதல் யாத்திரை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களையும், பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் சந்தித்து வருகிறோம். தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை, அமைக்கவே முடியாது என்று அவர் கூறியதாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

கோதாவரியில் இருந்து 100 டிஎம்சி தண்ணீரைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை பாஜக எடுத்து வருகிறது. அதேபோல, காவிரியில் தமிழ்நாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்றுக் கருத்தில்லை. அதற்காக பாஜக முழு முயற்சியை மேற்கொள்ளும்.

தமிழ்நாட்டில் மொழியை வைத்து மோசமான அரசியலை செய்து வருகின்றனர். ஹிந்தி பிரச்சார சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்கூட, தமிழ்த் தாய் வாழ்த்தை பாட வேண்டும் என ஆளுநர் கூறியிருக்கிறார்.

தமிழ்த் தாய்க்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கருத்து.

பாஜக என்றால் தமிழ்நாட்டுக்கோ, தமிழுக்கோ தொடர்பு இல்லை என்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருவதை கண்டிக்கிறேன்.

முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின்பேரில்தான் ப.சிதம்பரத்தின் மகன் கைது செய்யப்பட்டார். அது, பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஆனால், மக்களை தவறாக திசைத்திருப்புகிறார்கள். தவறு செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபித்துவிட்டு வரலாம்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் மக்களுக்கு நல்லத் திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்று தமிழ்நாடு முதல்வர் கூறியது சரியானது என்றார்.

பேட்டியின்போது, கட்சி நிர்வாகிகள் ராஜையன், கண்ணன், பார்த்திபன், கவுதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018