காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

நாமக்கல்லில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“வங்கிகளில் தொழில் செய்வதாக கூறி கடனை பெற்று கையாடல் செய்துவிட்டு பிற நாடுகளுக்கு தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் தாங்கள் பெற்ற கடனை இந்தியாவில் முறைப்படி முதலீடு செய்து இருந்தால் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

இந்திய அரசையும், மக்களையும் ஏமாற்றி தப்புபவர்களை அனுமதிக்கக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடியின் அரசு இதற்காக சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. இந்த சட்டத்தின்படி பணம் மோசடி செய்து விட்டு தப்புபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்பது இதன் முக்கிய அம்சம் ஆகும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயமாக அமைக்கும். அது நமது விவசாயிகளுக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படும் வகையில் இருக்கும். உச்சநீதிமன்றத்தின் எந்த தீர்ப்பையும் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுத்த தயாராக இல்லை. விரைவில் அங்கு தேர்தல் வர உள்ளதால் தனது அரசு காவிரி விவகாரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கருதுகிறது.

ஊழல் அதிகரித்து உள்ளதால் அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாத நிலையில் உள்ளது. எனவே காவிரி விவகாரத்தால் காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கூறி அங்குள்ள மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சி வருகிறது.நதிநீர் இணைக்கும் திட்டத்தை முதலில் செயல்படுத்த முன்வந்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.

அப்போது அவர் கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் கூறி இருந்தார். ஆனால் அதனை கொண்டு வர முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். அந்த திட்டத்தை இல்லாமல் ஆக்கியது காங்கிரஸ்.

காவிரி மற்றும் நதிநீர் இணைப்பை பற்றி பேச தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு என்ன உரிமை உள்ளது? தி.மு.க தலைவர் கருணாநிதி கூடா நட்பு கேடாய் முடியும் என சொன்னது போல் கூடா நட்பு தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது. அதுதான் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி.

1994-ல் வாஜ்பாய் அரசு வர வேண்டும் என பா.ஜனதா கூட்டணியில் தி.மு.க இருந்ததே, அப்போது மத ரீதியான ஆட்சி வரவேண்டும் என ஆதரித்தீர்களா? அல்லது சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்தீர்களா? நீங்கள் 5 ஆண்டு அமைச்சரவையில், கூட்டணியில் இருந்தபோது மதரீதியாக என்ன நடந்தது என தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கூற வேண்டும்.

பா.ஜனதா எந்த கட்சியோடும் கூட்டணி சேர வேண்டும் என ஏங்கி கிடக்கவும் இல்லை, ஏங்கி கிடந்ததும் இல்லை. கழகங்களால் தமிழகம் 50 ஆண்டுகளாக அழிந்து கொண்டு இருக்கிறது. இன்று உலக நாடுகள் தங்கள் நாடுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அது பிரதமர் மோடியால் முடியும் என நம்புகிறார்கள்.”

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018