பெங்களூருவில் அமித்ஷாவுக்கு சொகுசு வீடு: மாதம் ரூ.1½ லட்சம் வாடகை

பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா பதவி ஏற்றதில் இருந்து பா.ஜனதா கட்சி நாடு முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இவரது அதிரடி நடவடிக்கைகளால் பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து வருகிறது.

இந்தநிலையில் பா.ஜனதா பலவீனமாக உள்ள தென்மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த அமித்ஷா தீவிர முயற்சி செய்து வருகிறார். இதற்காக விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்துவதன் மூலம் அந்த கணக்கை தொடங்க நினைக்கிறார்.

இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமித்ஷா, தனது கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் இவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் கட்சிக்கு அதிக பொருட்செலவு ஏற்படுவது மட்டுமின்றி நேரமும் வீணாவதாக அவர் கருதுகிறார்.

இதனால் பிரசாரம் மேற்கொள்ளும் பகுதியில் முன்னேற்பாடு வேலைகளில் தனி கவனம் செலுத்த முடிவதில்லை எனவும், நிர்வாகிகளுடனும் சரியாக ஆலோசனை நடத்த முடியவில்லை எனவும் அமித்ஷா கருதுவதாக கூறப்படுகிறது.

எனவே தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு அவர், பெங்களூருவிலேயே தங்கியிருந்து மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.

இதற்காக மாநில பா.ஜனதாவினர், அமித்ஷா தங்குவதற்கு வசதியாக பெங்களூருவில் வீடு தேடி வந்தனர். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும், தொண்டர்களை அவர் சந்திக்கும் வகையிலும், ஆலோசனை செய்ய வரும் தலைவர்களின் கார் போன்ற வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் பா.ஜனதாவினர் வீடு தேடி வந்தனர்.

இந்த நிலையில் அமித்ஷா தங்குவதற்கு வசதியாக பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் ஒரு வீடு வாடகைக்கு பார்க்கப்பட்டு உள்ளது. 3 மாடிகளை கொண்ட இந்த சொகுசு வீட்டில் முதல் மற்றும் 2-ம் தளங்களில் 8 படுக்கை அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு அறையில் அமித்ஷாவும், மற்ற அறைகளில் அவரின் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் இந்த சுற்றுப்பயணத்தின் போது அவரோடு வரும் நபர்கள் தங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடடில் ஒரே நேரத்தில் 50 முதல் 60 கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் வகையில் பெரிய அரங்கம் ஒன்று உள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.

மேலும் அவரை சந்திக்க வரும் தலைவர்களின் வாகனங்களை நிறுத்த தேவையான இடம் இந்த சொகுசு வீட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் நால்வானி என்பவரின் வீடு எனவும், இந்த வீட்டிற்கு மாதவாடகையாக ரூ.1½ லட்சம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பா.ஜனதா ஆட்சியில் தொழில்துறை மந்திரியாக இருந்த முருகேஷ் நிரானி இந்த வீட்டில் வாடகைக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018