மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களின் அமைதியான தரிசனம், பாதுகாப்பு, மற்றும் நிர்வாக நலனை கருதி மத்திய பாதுகாப்பு படையினரின் ஆலோசனையின் பேரிலும் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்தும் இன்று (சனிக்கிழமை) முதல் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

வெளியூர்களிலிருந்து கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வருகை தரும் பக்தர்கள் தங்களின் செல்போன்களை வாகனத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் எனவும் விடுதிகளில் தங்கி தரிசனம் செய்பவர்கள் தங்களின் செல்போன்களை அங்கேயே வைத்து விட்டு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் போது செல்போன்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாமல் செல்போன்களை கொண்டு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவிலின் வடக்கு மற்றும் மேற்கு கோபுர நுழைவு வாயில்களில் செல்போன்களை வைப்பதற்கான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. அங்கு செல்போனை பாதுகாப்பதற்குரிய கட்டணமாக 10 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த நிலையில் நேற்று மாலை செல்போன்களை பாதுகாக்கும் பெட்டகம் மேற்கு கோபுர காலனி பாதுகாப்பு மையத்தில் அமைக்கப்பட்டது. 

இந்த பாதுகாப்பு பெட்டகத்தில் கட்டணம் செலுத்தி விட்டு, செல்போனை வைத்துப்பூட்டி ஒரு சாவியை பக்தர்கள் கொண்டு செல்லலாம்.

இன்னொரு சாவி மையப்பொறுப்பாளரிடம் இருக்கும். தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் பெட்டகத்தை திறந்து செல்போனை மீண்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதேநேரம் அங்கு வைக்கப்படும் செல்போன் பாதுகாப்பு நிபந்தனைகளுக்குட்பட்டது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018