தலைமை செயலகத்துக்கு செல்வதை தடுப்பது நியாயம் இல்லை- தங்க தமிழ்ச்செல்வன்

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களான தகுதி நிக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச் செல்வன், வெற்றிவேல் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேட்டி கொடுக்க சென்றனர்.

இதை முன்கூட்டியே அறிந்து கொண்ட போலீசார் அவர்களை கோட்டைக்குள் அனுமதிக்கவில்லை. அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். ஆனாலும் போலீசார் இருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் கோட்டைக்கு எதிரே உள்ள பூங்காவில் வெற்றிவேலும், தங்க தமிழ்ச் செல்வனும் பேட்டி கொடுத்தனர்.

இந்த நிலையில் கோட்டை போலீசார் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல், போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். இதற்காக தனிப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தங்க தமிழ்ச் செல்வனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

என்னைத் தேடி எந்த தனிப்படையும் வரவில்லை. நான் சென்னையில்தான் உள்ளேன்.

முதல்-அமைச்சர் மீது குற்றச்சாட்டு கூறினால் அது உண்மையா? இல்லையா? என்று விசாரணை நடத்துங்கள். அதுபற்றி மக்களிடம் கூறுங்கள். அதை விட்டு விட்டு நாங்கள் கோட்டைக்குள் வரக்கூடாது என்றால் அது என்ன நியாயம்?

நான் முன்னாள் எம்.பி.யாக உள்ளேன். பலதடவை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி இருக்கிறேன்.

என்னை தலைமைச் செயலகத்துக்குள் வரக் கூடாது என்று சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

தலைமைச் செயலகம் எல்லோருக்கும் பொதுவான இடம். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். எங்களை மட்டும் வரக் கூடாது என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? அதனால்தான் போலீசாரிடம் விளக்கம் கேட்டோம்.

உடனே எங்கள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். இதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம். வழக்கை சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018