ஸ்ரீதேவி மரணத்தால் ஒன்று சேர்ந்த தந்தை - மகன்

ஸ்ரீதேவி மரணத்தால் போனிகபூரும், அவரது மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

ஸ்ரீதேவியை போனிகபூர் மணந்ததும் தனது முதல் மனைவி மோனா, மகன் அர்ஜுன், மகள் அன்சுலாவை பிரிந்தார். ஸ்ரீதேவியுடனேயே வசிக்க ஆரம்பித்தார். முதல் மனைவியை அவர் கண்டுகொள்ளவில்லை. சிறுவயதிலேயே தங்களை தவிக்கவிட்டு சென்றதாக போனிகபூர் மீது அர்ஜுனுக்கு கோபம் இருந்தது.

இதனால் ஸ்ரீதேவியையும் அவருக்கு பிடிக்கவில்லை. பொது நிகழ்ச்சிகளில் சந்தித்தால் பேசாமலேயே சென்று விடுவார். போனிகபூர் குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோரிடமும் அவர் பேசியது இல்லை.இந்த நிலையில் ஸ்ரீதேவி மரணம் அடைந்ததும் அர்ஜுன் கோபத்தை மறந்து தந்தைக்கு உதவியாக இருக்க துபாய் புறப்பட்டுச் சென்றார்.

ஸ்ரீதேவி உடலை மும்பை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஸ்ரீதேவி இறுதி ஊர்வலத்தில் அவர் உடல் வைக்கப்பட்டு இருந்த வாகனத்தில் ஸ்ரீதேவி உடல் அருகிலேயே நின்றார். ஜான்வி, குஷி ஆகியோரை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.

ஸ்ரீதேவி மரணம் போனிகபூரையும், அவரது மகனையும் ஒன்று சேர்த்துவிட்டது என்று இந்தி பட உலகினர் பேசி வருகிறார்கள்.

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018