கூட்டணியில் விரிசல்- சந்திரபாபு நாயுடுவுக்கு அமித்ஷா அழைப்பு

ஆந்திரா மாநிலம் பிரிவினைக்குப் பின் அம்மாநிலத்துக்கு என்று மத்திய அரசு உதவியுடன் தனியாக தலைநகரம் உருவாக்கப்படுகிறது.

மேலும் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்துள்ளார். இது பா.ஜனதா- தெலுங்கு தேசம் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜனதா மந்திரிசபையில் தெலுங்கு தேசம் கட்சி இடம் பெற்றுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யாததால் ஆந்திர எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினார்கள்.

கூட்டணியில் நீடிப்பதை மறுபரிசீலனை செய்வோம் என்றும் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக கட்சியின் உயர்மட்டக்குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார். கடைசி நேரத்தில் நிதி மந்திரி அருண்ஜெட்லி கேட்டுக் கொண்டதால் தனது முடிவை நிறுத்தி வைத்தார்.

ஆனாலும் மத்திய அரசு இதில் முடிவு எடுக்காமல் தாமதித்து வருவதால் தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இதில் 5-ந்தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளார்.

கெடு நெருங்குவதால் பா.ஜனதா தலைவர் அமித் ஷா இந்த வி‌ஷயத்தில் நேரடியாக தலையிட முடிவு செய்துள்ளார். சிறப்பு நிதி தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமித்ஷா சந்திரபாபு நாயுடுவுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும் இது மரியாதை நிமித்தமான பேச்சு என்றும் தெலுங்கு தேசம் தனது நிலையில் உறுதியாக இருப்பதாக சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்.பி.க்களிடம் தெரிவித்தார். 

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018