ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் வெங்கடேஷ் பிரசாத் திடீர் ராஜினாமா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத் ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக பதவி வகித்து வந்தார். அவர் பதவியில் இருக்கும் இந்திய ஜூனியர் அணி உலகக்கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரசாத் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். இவர் 30 மாதமாக இப்பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் ராஜினாமா செய்வதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை. தனிப்பட்ட காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சி.கே.கன்னா, 'வெங்கடேஷ் கிரிக்கெட்டில் வேறு பொறுப்பை ஏற்பதற்காக ராஜினாமா செய்துள்ளார். அது குறித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தில் தெளிவாக கூறவில்லை. இந்திய ஜூனியர் அணியை தேர்ந்தெடுப்பதில் அவர் மிக முக்கிய பங்கு வகித்தார். அவரது பதவிக்கு வேறு யாரும் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை' என கூறினார். 

ஜூனியர் அணி தேர்வுக்குழுவில் உள்ள 6 உறுப்பினர்களில் வெங்கடேஷ் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018