ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் த்ரிஷா: வாய்ப்பு கொடுப்பாரா கார்த்திக் சுப்புராஜ்?

ரஜினியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படும் நடிகை த்ரிஷாவுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வாய்ப்பு கொடுப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை த்ரிஷா. விஜய், அஜித், விக்ரம் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து கூட நடித்துள்ளார். ஆனால், தற்போது, த்ரிஷாவுக்கு ஒரேயொரு குறை இருக்கிறதாம்.

அதுவும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அது, அவருக்கு ஜோடியாவோ அல்லது, அவரது மகளாகவோ இருக்கலாம். ஆனால், அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது மட்டும் தான். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருக்கிறார். இந்தப் படத்திலாவது தனது ஆசை நிறைவேறுமா என்று ஆவலுடன் காத்திருக்கிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா ஆகியோரை பரிந்துரை செய்கிறார்களாம்.

இதில், முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் அனுஷ்காவிற்கு இடையில் கடும் போட்டியிருப்பதால், த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த ராதிகா ஆப்தே, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முன்னணியில் இருக்கிறார்களாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018