பணபலம் மற்றும் பிரிவினைவாதிகள் உதவியுடன் திரிபுராவில் குறுக்கு வழியில் பாஜ ஆட்சியை பிடித்துள்ளது: நல்லகண்ணு

பணபலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை மூலம் குறுக்கு வழியில் திரிபுராவில் பாஜ ஆட்சியை பிடித்துள்ளது என மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நடுவர் மன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இதனடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் கூடி, பிரதமரை சந்திக்க முடிவெடுத்தது வரவேற்கத்தக்கது’’ என்றார்.

திரிபுரா ஆட்சி மாற்றம் குறித்து, மாநிலம் காவி மயமாகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளாரே என கேட்டதற்கு, ‘‘20 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் சிறப்பான ஆட்சி நடத்தினர். 

திரிபுராவில் தனிமாநிலம் கோரும் பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்து பணபலம், அதிகார துஷ்பிரயோகத்தால், குறுக்கு வழியில் பாஜ ஆட்சியை பிடித்துள்ளது,’’ என்றார். தமிழக அரசின் செயல்பாடு குறித்து கேட்டதற்கு, ‘மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. அரசு செயலற்று உள்ளது’ என்றார்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018