காவிரி பிரச்னைக்காக நீர்வளத்துறை அமைச்சரை சந்திப்பதில் அர்த்தமில்லை: சிவகாசியில் வைகோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சாத்தியமில்லை என கூறிய மத்திய நீர்வளத்துறை அமைச்சரை, சந்திப்பதில் அர்த்தமில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று வந்த வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘காவிரி பிரச்னையில் மத்திய அரசு பச்சை துரோகம் செய்துவிட்டது. இந்த பிரச்னைக்காக தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் இணைந்தது ஆரோக்யமான அரசியல். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சாத்தியமில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர்  கூறியுள்ளார். எனவே, அவரை சந்திப்பதில் அர்த்தம் இல்லை. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுத்தது உண்மை என்பதை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியநிலையில், அதனை மறுத்து பேட்டியளிக்கும் அமைச்சர் ஜெயக்குமார், தனது பண்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018