அரசை அமைப்பது தொடர்பாக அனுபவம் இல்லாதவர் ராகுல்- பாஜக

ஒரு அரசாங்கத்தை எப்படி அமைக்க வேண்டும் என்கிற வியூகங்களை புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் இல்லாதவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என சாடியுள்ளார் பாஜகவின் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா (மறைந்த பி.ஏ. சங்மாவின் மகன்) தலைமையில் ஆட்சி அமைய உள்ளது.

பெரும்பான்மையைவிட அதிகமாக மொத்தம் 34 எம்.எல்.ஏக்கள் தங்களது கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக கங்கா பிரசாத்திடம் கடிதம் கொடுத்திருக்கிறார் கான்ராட் சங்மா.

இதையடுத்து வரும் 6-ந் தேதி கான்ராட் சங்மா முதல்வராக பதவியேற்க உள்ளார். மேகாலயாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி அரசை உருவாக்குவதில் பாஜகவின் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா முக்கிய பங்காற்றியவர்.

ஷில்லாங்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, தற்போது எங்களது கூட்டணிக்கு 34 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை உயரும். மேகாலயாவில் ஆட்சி அமைக்க 4 மூத்த தலைவர்களை ராகுல் காந்தி மேகாலயாவுக்கு அனுப்பி வைத்தார்.

ஒரு அரசாங்கத்தை எப்படி அமைக்கப் போகிறோம் என்கிற வியூகம் எதுவும் இல்லாமலேயே இந்த 4 பேரையும் ராகுல் அனுப்பி வைத்திருக்கிறார். ராகுலிடம் எந்த அனுபவமும் இல்லை என்பதாகத்தான் இதை பார்க்கிறேன். இவ்வாறு ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா கூறினார்.


Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018