சஞ்சனாவை கரம்பிடித்தார் நடிகர் கதிர்

மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் கதிருக்கும், தொழிலதிபர் மகள் சஞ்சனாவுக்கும் ஈரோட்டில் வைத்து நேற்று திருமணம் நடந்தது. `மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கதிர்.

அவரது நடிப்பில் அடுத்ததாக கிருமி, என்னோடு விளையாடு,விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் ரிலீசாகின. இந்நிலையில், கதிர் தற்போது `சிகை', `சத்ரு', `பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் `சிகை' வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது. 

இந்நிலையில், கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சஞ்சனாவுக்கும் ஈரோட்டில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தில் இயக்குநர் அட்லி, ப்ரியா அட்லி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாத இறுதியில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் கதிர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கதிர் - சஞ்சனா தம்பதிகளுக்கு திரையுலகின் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல் நடிகர் ரமேஷ் திலக்குக்கும், ரேடியோ ஜேக்கியான ஆர் ஜே நவலட்சுமிக்கும் சென்னையில் வைத்து நேற்று திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தது. 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018