துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் நடத்தப்படும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில் கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. இந்த ஜோடி 476.1 புள்ளிகள் பெற்றது. ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் - சாண்ட்ரா ரிட்ஸ் ஜோடி 475.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது.

பிரான்சின் கோபர்வில்லி, பவுகியூட் ஜோடி 415.1 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றது. இந்தியாவின் ரிஸ்வி, அகர்வால் ஜோடி 372.4 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.

முன்னதாக நடைபெற்ற கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், மெஹுலி கோஷ் ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. இந்த ஜோடி 435.1 புள்ளிகள் பெற்றது. சீனாவின் சூ, சென் ஜோடி 502 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றது.

இதுவே கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் உலக சாதனையாகும். ரோமானியாவின் கோமன், மோல்டோவேனு ஜோடி 498.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தியாவின் குமார், சண்டேலா ஜோடி 392.6 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.

இதன்மூலம் இந்த தொடரில் 3 தங்கம், 4 வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்கள் வென்ற இந்திய அணி பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. சீனா மற்றும் ரோமானியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018