மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் 7 தனியார் நிறுவனங்களுக்கு ப.சிதம்பரம் சலுகை - பா.ஜ.க. குற்றச்சாட்டு

2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், கீதாஞ்சலி ஜெம்ஸ் உள்பட 7 தனியார் நிறுவனங்களுக்கு ப.சிதம்பரம் தங்கம் இறக்குமதி சலுகை அளித்தார் என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது.

பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சிக்கலில் உள்ள பணத்தின் உண்மையான மதிப்பை வங்கி பதிவேடுகளில் பதிவு செய்யாமல் பொருளாதாரத்தையே சீர்குலைத்தது. 2008-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை, வங்கிகள் கொடுத்த முன்பணம் ரூ.52 லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

ஆனால், அதில் 36 சதவீத முன்பணம் மட்டுமே சிக்கலில் உள்ள சொத்துகளாக பதிவு செய்யப்பட்டன. பொருளாதார மேதைகளாக கூறப்படும் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோரது நிர்வாகத்தில் வங்கி நிர்வாகம் இப்படிப்பட்ட குறுக்கீடுகளால் சீர்குலைக்கப்பட்டது.

அதிலும், மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான மே 16-ந் தேதி, 80:20 தங்கம் இறக்குமதி திட்டத்தின் கீழ், நிரவ் மோடி உறவினர் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் உள்ளிட்ட 7 தனியார் நிறுவனங்களுக்கு சலுகை அளித்தார். இதை பின்னாளில் எங்கள் அரசு ரத்து செய்தது.

தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், இந்த சலுகை அளித்ததற்கு என்ன அர்த்தம். அந்த நாளில், மன்மோகன் சிங் அரசு பதவி இழந்தது. ப.சிதம்பரத்தின் பதவியும் போனது. அப்படிப்பட்ட நாளில், தனியார் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் உத்தரவை வெளியிட்டது ஏன் என்று ப.சிதம்பரமும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விளக்குவார்களா? இது ஊழல் அல்லாமல் வேறு என்ன? இது, வெட்கக்கேட்டின் உச்சம்.

ப.சிதம்பரத்தின் உண்மையான முகத்தை நாட்டு மக்களுக்கு காட்டுவதே எங்கள் நோக்கம். அவர் காங்கிரஸ் மேலிட ஆசியுடன்தான் இதை செய்துள்ளார்.

அந்த அளவுக்கு கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவு திரட்டியது யார்? இதற்காக யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்று காங்கிரஸ் சொல்ல வேண்டும். ஆனால், எந்த ஊழல்வாதியையும் நாங்கள் தப்பிக்கவிட மாட்டோம். பா.ஜனதா ஆட்சியைப் பற்றி கட்டுக்கதைகளை காங்கிரஸ் பரப்பி வருகிறது.

ரபேல் விமான பேரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. ஆதார், ஜி.எஸ்.டி. போன்ற சீர்திருத்தங்களால், ஒளிவுமறைவற்ற தன்மை உருவாகி, ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான், இத்தகைய சீர்திருத்தங்களை காங்கிரஸ் எதிர்க்கிறது.

ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று ஏமாற்றிய வைர வியாபாரி ஜதின் மேத்தா, கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்தான் நாட்டை விட்டு தப்பி ஓடினார். இத்தாலியில் இருந்து திரும்பியவுடன், ராகுல் காந்தி இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

ஆனால், பா.ஜனதா ஆட்சியில் வழங்கப்பட்ட கடன் எதுவும் வாராக்கடன் ஆகவிட மாட்டோம்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார். 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018